சிற்பம்
நேமிநாதர்
நேமிநாதர்
சிற்பத்தின் பெயர் | நேமிநாதர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | சமணர் மலை |
ஊர் | கீழக்குயில் குடி |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
24 சமண தீர்த்தங்கரர்கள் 22-வது தீர்த்தங்கரர் நேமிநாதர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நேமிநாதர் சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர். சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன், சிவாதேவிக்கும் ஹரிவம்சம் எனும் யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில்பிறந்தவர். இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர். தாங்குதளத்துடன் கூடிய பீடத்தில் சமண தீர்த்தங்கரர் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். முனிவரின் தலைக்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. நேமிநாதரின் வலது புறம் நின்ற நிலையில் பத்மாவதி இயக்கி சமபாதத்தில் காட்டப்பட்டுள்ளாள். இடது கையை தொடையில் வைத்தவாறும், வலது கையில் மலரைப் பிடித்தபடியும், கரண்ட மகுடம் அணிந்து பத்மாவதி உள்ளாள். தீர்த்தங்கரரின் இடதுபுறம் சாமர வீரன் காட்டப்பட்டுள்ளான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நேமிநாதர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |