சிற்பம்
சிவன்
சிவன்
சிற்பத்தின் பெயர் | சிவன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
ஊர் | கழுகு மலை |
வட்டம் | கோவில்பட்டி |
மாவட்டம் | தூத்துக்குடி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
மழு, மறியுடன் அமர்ந்திருக்கும் இளமையான சிவனார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இளமைத் தோற்றத்துடன் யௌவன புருஷராய், சிவனார் ஆசனத்தில் லீலாசனத்தில் அமர்ந்த கோலம். பூரிமத்துடன் உள்ள ஜடாபாரம் தலையில் அழகு செய்கிறது. தங்கத் தகடால் ஆன நெற்றிப்பட்டை நடுவில் மணி பதிக்கப்பெற்று விளங்குகின்றது. நெற்றியில் முக்கண் அமைய, குறுநகையுடன் விளங்கும் முகத்தை உடையவராய் திகழ்கிறார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள், கழுத்தில் மணியாரம், மார்பில் உத்தரீயம் (மேலாடை) இடது தோளில் மடிந்து விழுந்துள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சிவன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |