Back
கல்வெட்டு
கரையான்காட்டுப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கரையான்காட்டுப்பட்டி
ஊர் கரையான்காட்டுப்பட்டி
வட்டம் கொல்லிமலை
மாவட்டம் நாமக்கல்
அமைவிடத்தின் பெயர் கரையான்காட்டுப்பட்டி சாலையோரம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல்லைக் கண்டனர். இந்தக் கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. 'கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு வீரன் பெயரை அறிய முடியவில்லை. இந்த நடுகல்லானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும், 35 செ.மீ. அகலமும் உள்ளது.கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் வீரன் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.ஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது. செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகவும், இடையில் வரிந்து கட்டிய சிற்றாடை, இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. சிற்றாடையின் முந்தானை வலப்புறம் இருக்க, மடியை மறைக்குமாறு முக்கோணத் தொங்கலாக ஆடையின் கீழ்பகுதி இறக்கிவிடப்பட்டுள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டுள்ளது.
கரையான்காட்டுப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001919/TVA_INS_001919_ந...

  • TVA_INS_001919/TVA_INS_001919_ந...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 222
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு