கல்வெட்டு
திருப்பரங்குன்றம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருப்பரங்குன்றம் |
|---|---|
| ஊர் | திருப்பரங்குன்றம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முதல்பகுதி தடித்த எழுத்துக்களாகவும் இரண்டாம் பகுதி மெலிந்த எழுகத்துக்களாகவும் உள்ளன. நடுவில் ஒரு குத்துக்கோடு உள்ளது. எருகாடுர் இழ குடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுசாத்தன் இந்தக் கற்படுக்கையைச் செய்தான் என்று கொள்ளலாம். ‘எருகாடுர்’ என்ற சொல்லில் 'க்' மெய்யும், ‘ஆய்சயன்’ என்பதில் ‘ச்’ ஒற்றும், ‘நெடுசாதன்’ என்பதில் ‘த்’ மெய்யும் சேர்த்து முறையே எருக்காடுர், ஆய்ச்சயன், நெடுசாத்தன் என்று கொள்ள வேண்டும். எருகாடூர் என்பது சிவகங்கை மாவட்டம் திருமலை தமிழ்-பிராமி கல்வெட்டிலும், பிள்ளையார்ப்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் (எக்காடுர்) இடம்பெற்றுள்ளது. ஒரு வேளை இவ்வூர் திருப்புத்தூர் வட்டத்தில் அமைந்திருந்த ஓர் ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலைப் பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார்.எக்காட்டூர், எருக்காடுர் இரண்டும் ஒன்றே எனக் கருதலாம். இழகுடும்பிகன் என்னும் சொல்லை இழ, குடும்பிகன் என இரண்டாகப் பிரிக்கலாம். குடும்பிகன் என்பது குடும்பத் தலைவர் எனப் பொருள்தரும். கிரஹபதி என்னும் வடசொல்லின் தமிழ் வடிவமே குடும்பிகன் என்பதாகும். இழ அல்லது ஈழ என்பது கள் இறக்கும் தொழிலைக் குறிக்கும். எனவே இவனைக் கள் இறக்கும் குடும்பத்தின் தலைவன் எனக் கருதலாம் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். போலாலயன் என்பது கொடையாளியின் இயற்பெயர் ஆகும். ஆய்சயன நெடுசாத்தன் என்பதும் இயற்பெயர் என்றே கொள்ளத்தகும்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 262 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |