கல்வெட்டு
கீழ்இராவந்தவாடி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கீழ்இராவந்தவாடி
ஊர் கீழ்இராவந்தவாடி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் ஊரின் மேற்கேயுள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் வலப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் வில்லும், இடது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. வலது காலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும் உள்ளன. வீரனின் வலது தோளில் அம்பு பாய்ந்துள்ளது. உருவத்தின் மேற்பகுதியிலும் இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. பல்லவமன்னன் நந்திவர்மனின் நாற்பத்து நான்காம் ஆட்சி ஆண்டில் மலாட்டு மேற்கோவலூர் நாட்டு இராமந்தைவாடி மேல்மங்களப்பெருமனார் படை தாக்கிய பொழுது வாணபெருமானாரின் சேவகன் வேணர்க்களியன் என்பான் போரில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கீழ்இராவந்தவாடி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 52
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு