கல்வெட்டு
தொண்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | தொண்டி |
|---|---|
| ஊர் | தொண்டி |
| வட்டம் | திருவாடானை |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கைக்களான் குளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சேது வழியில் உள்ள பழைய ஊர் தொண்டி. இது சில பாண்டி நாட்டுத் துறைமுக நகர்கள் போலப் பவுத்திர மாணிக்கப்பட்டினம் என்று பெயர் பெற்று விளங்கிய சிறப்பினை உடையது. பவுத்திர மாணிக்கம் என்பது மாசிலாமணி, தூமணி (தூய்மணி), நன்மணி என்றும் குறிக்கப்பெறும். தொண்டியில் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரியகுளம் 'கைக்களான்குளம்' என்பதாகும். குளத்தின் நடுவே நடப்பட்டுள்ள தூண் கல்வெட்டு மூலம் அக்குளத்தின் பழம் பெயர் 'காளிகணக்குளம்' என்று தெரிகிறது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிவகங்கை அரசுத்தலைவர் சின்னமருது அக்குளத்தின் கலிங்கினைக் கட்டினார் என்று அக்கலிங்கின் இருபுறமும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டால்அறியலாம். ஒரே கல்வெட்டு கலிங்கின் இருபுறமும் இரண்டு இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 142 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |