கல்வெட்டு
மறுகால்தலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மறுகால்தலை
ஊர் மறுகால்தலை
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
குறிச்சொல்
சுருக்கம்
பஞ்சபாண்டவர் படுக்கை குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் 40 செ.மீ. உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும். சமஸ்கிருதத்தில் ‘கஞ்சணம்' என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இங்குப் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது. காசிபன் என்ற சொல்லில் உள்ள ‘சி’ என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும். இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும் கல்வெட்டுப் பகுதிக்கும் இடையில் சுமார் 40 அடி இடைவெளி இருந்ததால் கீழிருந்து படிக்க ஏதுவாகப் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். தற்போது தரைத்தளம் உயர்ந்துள்ளது.
குறிப்புதவிகள்
மறுகால்தலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 198
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு