கல்வெட்டு
இனாம்குளத்தூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | இனாம்குளத்தூர் |
|---|---|
| ஊர் | இனாம்குளத்தூர் |
| வட்டம் | விராலிமலை |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| அமைவிடத்தின் பெயர் | இனாம்குளத்தூர் விநாயகர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இனாம்குளத்தூர் திருச்சி விராலிமலை சாலையில் திருச்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில்உள்ளது. இவ்வூரின் கிழக்கே முகப்பு வாயிலில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சிறிய விநாயகர் கோயில் மரத்தடியை ஒட்டி கீழ்ப்புறம் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதி வட்டவடிவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் நந்தி உருவம் காணப்படுகிறது. புதையுண்டிருந்த இத்தூண்களின் அடிப்பகுதியில் முன்புறமும், பக்கவாட்டிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதியை நோக்கும்போது இவை கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். மூன்றாம் நினைவுத் தூணில் 9 வரிகளில் உள்ள கல்வெட்டில் உறத்தூர் கூற்றத்து வடகோநாட்டினை சேர்ந்த தலைநாழி என்பவன் அல்லது என்பவனுக்காக நாட்டின கல் இது என்று பொறிக்கப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 105 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |