கல்வெட்டு
பெரியபொம்மட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பெரியபொம்மட்டி |
|---|---|
| ஊர் | பெரியபொம்மட்டி |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | பெரிய வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வலக்கையில் வாளும் இடக்கையில் வில்லும் பற்றி நிற்கும் வீரன் இடக்காலைச் சற்று முன்வைத்தநிலையில்காட்சியளிக்கிறான். இவனது மார்பிலும் வயிற்றிலும் அம்புகள் பாய்ந்துள்ளன. காலில் கழல் காணப்படுகிறது. காலின் வலப்புறத்தே ஆநிரை இரண்டும், இடப்புறத்தே நாயொன்றும் காணப்படுகின்றன. வீரனின் தலைக்கு மேலும், இடப்புறத்தும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. வீரநுளம்பனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில், கவர்ந்த ஆநிரையை மீட்கும்போது. செகத்தூருடைய மாணிக்கடையனார் என்பவர் இறந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 84 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |