சிற்பம்
அப்சரஸ்
அப்சரஸ்
| சிற்பத்தின் பெயர் | அப்சரஸ் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
| ஊர் | கழுகு மலை |
| வட்டம் | கோவில்பட்டி |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
|
விளக்கம்
எழில் மிகு தோற்றத்துடன் அமர்ந்துள்ள ஏந்திழையாள் அப்சரஸ் எனப்படும் தேவ மங்கை
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கழுகு மலை வெட்டுவான் கோயிலில் விமானத்தின் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூட்டில் அமைந்துள்ள கோட்டத்தில் காட்டப்பட்டுள்ள இந்த அழகிய நங்கை மகாராஜ லீலாசனத்தில், இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி, வலது கையை ஆசனத்தில் ஊன்றி, இடது கையை குத்துக்காலிட்ட இடது முழங்காலில் வைத்தவாறு அமர்ந்துள்ளாள். இடது கை சிதைந்துள்ளது. தலையில் கரண்ட மகுடம் அழகு செய்கின்றது. வலது பின்புறம் சுருள் குழல்கள் தொங்குகின்றன. கழுத்தில் கண்டிகையும், சவடியும் அணிந்துள்ளார். காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகளில் தோள் வளை, இரட்டை முன்வளைகள் ஆகியனவும், இடையில் முகப்புடன் கூடிய தாரகைச்சும்மை என்னும் இடையணி அணிந்துள்ளார். ஆடை நூலாடையாக இருக்கலாம். கணுக்காலில் ஆடை மடிப்பு தெரிகின்றது. அமர்ந்திருக்கும் நிலைக்கு ஏற்றாற் போல் இப்பெண்ணின் இடை வளைந்து, நெகிழ்ந்து காணப்படுகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
அப்சரஸ்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 25 |
| பிடித்தவை | 0 |