| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அப்சரஸ் |
| 300 | : | _ _ |a வாழ்வியல் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a பெண்களில் பேரழகியாகத் திகழும் எழில் நங்கை |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a எழில் மிகு தோற்றத்துடன் இளம் நங்கையாக விளங்கும் இப்பெண், நடக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளாள். மூன்று நிலைகளில் அவள் உடல் காட்டப்பட்டுள்ளது. இது சிற்பியின் கலை நயமாகும். இப்பெண் இடது கையில் வைத்திருப்பது மதுக்குடுவை போன்று உள்ளது. இடையிலிருந்து நழுவும் தனது இடைக்கட்டினை வலது கையால் பிடிக்கிறாள். முகம் நாணத்தோடு திரும்பியுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது காலருகே தொங்குகின்றது. தலையலங்காரமாக கொண்டையும், செவிகளில் செவிப்பூக்களும், தாடங்கம் என்னும் பெரிய தோடுகளும், கழுத்தில் பதக்கத்துடன் கூடிய பொன்னாலான முறுக்கணியும், கைகளில் தோள் வளைகளும், கால்களில் சிலம்புகளும் கொண்டுள்ளார். தலைவனுடன் காதல் லீலை புரிவாள் போல் தோன்றுகிறது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், அப்சரஸ், பெண், பேரழகி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000548 |
| barcode | : | TVA_SCL_000548 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |