சிற்பம்

ஈஞ்சம்பள்ளி நடுகல்
சிற்பத்தின் பெயர் | ஈஞ்சம்பள்ளி நடுகல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | ஈஞ்சம்பள்ளி |
ஊர் | ஈஞ்சம்பள்ளி |
வட்டம் | மொடக்குறிச்சி |
மாவட்டம் | ஈரோடு |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-16 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி என்னும் ஊரில் இரு நடுகற்கள் காணப்படுகின்றன. இவ்விரு நடுகற்களும் தற்போது உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நடுகல், நடுகல் சிற்பத் தொகுதி போன்று காணப்படுகின்றது. இச்சிற்பத் தொகுதியில் வீரன் ஒருவன் கையில் வில்லாயுதத்துடன் நின்ற நிலையில் காணப்படுகின்றான். அதனைத் தொடர்ந்து அவ்வீரன் தன் பகைவனை வாளால் குத்திக்கொல்லும் காட்சி இடம் பெறுகிறது. இந்த பூசலின் போது அவ்வீரனும் உயிர் நீத்தான் போலும். இந்நடுகல் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |