சிற்பம்
நடுகல்
சிற்பத்தின் பெயர் நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் கரியாக்கவுண்டனூர்
ஊர் கரியாக்கவுண்டனூர்
வட்டம் அன்னூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
அமைவிடத்தின் பெயர் கரியாக்கவுண்டனூர்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வீரனொருவன் இடது கையில் வில்லுடனும், வலது கையில் குறுவாளைப் பிடித்தபடியும் நின்றுள்ளான், வீரனின் முகம் சிதைந்துள்ளது. தலையில் கொண்டையலங்காரம் உள்ளது. காதுகளில் பத்ரகுண்டலங்கள் விளங்குகின்றன. இடைக்கட்டின் முடிச்சு வலதுபுறம் காட்டப்பட்டுள்ளது. கைகளில் முன்வளை, தோள்வளை, கேயூரம் ஆகியன அணிந்துள்ள இவ்வீரன் நேர்பார்வையாக இடது காலை ஊன்றி வலது காலை சற்று முன்னோக்கி வளைத்து நிற்கிறான். சிறிய அளவிலான புடைப்புச் சிற்பமாக இந்த நடுகல் சிற்பம் விளங்குகின்றது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நடுகல் வீரன் புடைப்புச் சிற்பம் ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம் வடக்கலூர் ஊராட்சியைச் சேர்ந்த கரியாக்கவுண்டனூர் என்னும் சிற்றூரில் வழிபாட்டில் உள்ளது.
குறிப்புதவிகள்
நடுகல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்