Back
சிற்பம்

சமண தீர்த்தங்கரர்கள்

சமண தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின் பெயர் சமண தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின்அமைவிடம் சிதரால்
ஊர் சிதரால்
வட்டம் தோவாளை
மாவட்டம் கன்னியாகுமரி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
சமணக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப காலந்தோறும் தோன்றிய சமண தீர்த்தங்கரர்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும். தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர். இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு; 1. விருஷப தேவர் (ஆதி பகவன்.) 2. அஜிதநாதர். 3. சம்பவ நாதர் 4. அபி நந்தனர் 5. சுமதி நாதர் 6. பதும நாபர் 7. சுபார்சவ நாதர் 8. சந்திரப் பிரபர் 9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்) 10. சீதள நாதர் 11. சீறீயாம்ச நாதர் 12. வாசு பூஜ்யர் 13. விமல நாதர் 14. அநந்த நாதர் 15. தருமநாதர் 16. சாந்தி நாதர் 17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்) 18. அரநாதர் 19. மல்லிநாதர் 20. முனிசு வர்த்தர் 21. நமிநாதர்(நமிபட்டாரகர்) 22. நேமிநாதர் (அரிஷ்ட நேமி) 23. பார்சுவ நாதர் 24. வர்த்தமான மகாவீரர் சிதரால் மலையில் அமைந்துள்ள சமண சிற்பங்களில் வரிசையாக தீர்த்தங்கரர்கள் வடிக்கப்பட்டுள்ளன. நீர்கெண்டி, ஆலவட்டம், பூரணக்கும்பம், கொடி, சந்தனக் கிண்ணம், குடை, கண்ணாடி, சாமரம் ஆகிய இந்த 8 மங்கலப் பொருட்களும் தீர்த்தங்கரர்களின் அருகில் காட்டப்படும். மேலே காட்டப்பட்டுள்ள சிற்பத்தொகுதியில்அமர்ந்துள்ள தீர்த்தங்கர்களுக்கிடையே இந்த மங்கலச் சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
சமண தீர்த்தங்கரர்கள்
சிற்பம்

சமண தீர்த்தங்கரர்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்