Back
சிற்பம்

சமணத் தீர்த்தங்கரர்கள்

சமணத் தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின் பெயர் சமணத் தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின்அமைவிடம் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்
ஊர் வளத்தி
வட்டம் மேல்மலையனூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-13-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

தீர்த்தங்கரர்களின் செப்புத் திருமேனிகள் உலாப்படிமங்களாக உள்ளன. அவற்றுள், ஆதிநாதர், பார்சுவநாதர், தர்மதேவி, பத்மாவதி ஆகிய செப்புத்திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை. கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவ தீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர்.

ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயம் என்றழைக்கப்படும் சமணக் கோயில்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. செஞ்சிக்கு வடக்கே சுமார் 10கிலோமீட்டர் தொலைவில் செஞ்சி வந்தவாசி நெடுஞ்சாலையில் வளத்தி கிராமம் அமைந்துள்ளது. செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சைனக் கிராமங்களுள் ஒன்று வளத்தி ஆகும். இந்த கோயிலில் இருக்கும் கடவுளான ஆதிநாதர் சமணத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் முதலாம் தீர்த்தங்கரர் ஆவார். ஸ்ரீ ஆதிநாதர் திகம்பரர் சமணக் கோயில் மேலும் நைனார் கோயில் எனவும் அறியப்படுகிறது. வளத்தி சமணக்கோயிலில் உபவாசம் சிறப்பாக பின்பற்றப்படுகிறது. பெண்கள் உபவாசத்தை மேற்கொண்டு தீர்த்தங்கரர்களின் பெயர்களை ஐந்து முறை கூறிவிட்டு பின் உணவு உட்கொள்கின்றனரர். பௌர்ணமி மற்றும் சதுர்த்தசி, அஷ்டமி ஆகிய நாட்களில் உண்ணாவிரதம் மற்றும் மதச்சடங்குகளை மேற்கொள்கின்றனர். வளத்தி மலை நல்ஞானக்குன்று அல்லது நெடுஞ்சாங்குன்று என்றழைக்கப்படுகிறது. இக்குன்றின் இயற்கையாக அமைந்த குகைத்தளம் காணப்படுகிறது. இக்குகையில் பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.பார்சுவநாதர் நின்ற கோலத்தில் தாமரை மலரில் கால்கள் பதிந்தவாறு உள்ளது மற்றும் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலுள்ளது. வளத்தி ஜினாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  விளங்குகின்றது. கருவறையில் மூலவர் ஆதிநாதர் கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக உள்ளது. கோபுரத்தின் தளப்பகுதியில் வாயிற்காவலர்களின் சுதையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கோபுரத்தைக் கடந்து பலிபீடம், மானஸ்தபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப் பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் அமைந்துள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. விமானம் திராவிடபாணியில் ஏகதளத்தைப் பெற்றுள்ளது. மண்பங்கள் தூண்களைப் பெற்று விளங்குகின்றன.

குறிப்புதவிகள்
சமணத் தீர்த்தங்கரர்கள்
சிற்பம்

சமணத் தீர்த்தங்கரர்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்