கல்வெட்டு
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | தாராசுரம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் உள்ள பலகைக் கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பொற்பிரமன் என்பவன் ஊர் அழிவின் போது அதனைக் காப்பாற்றுவதன் பொருட்டுத் தன் உயிரினை நீத்தான் எனவும், அவனை நினைவுகூரும் வகையில் கீழ்வேளூர் என்னும் ஊரினைச் சார்ந்த சபையோர்கள் ஒரு கொடை நிபந்தம் செய்த செய்தியினையும் இக்கல்வெட்டு பகர்கிறது. நாகப்பட்டினத்திற்கு அருகாமையில் கீழ்வேளூர் என்னும் ஊர் உள்ளது. இந்நடுகல் அவ்வூரினைச் சார்ந்ததாகக் கருதலாம். இக்கல்வெட்டு “நிபந்தத்துக்கு விரோதஞ் செய்தால் காவிரி குலை குத்தினான் பாவங் கொள்வான்“ என முடிகின்றது. பொதுவாகக் கல்வெட்டுகளில் “கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் கொள்வான்“ என ஓம்படைக்கிளவி குறிக்கப்படும். ஆனால் இக்கல்வெட்டில் காவிரியின் கரையினை அழித்தல் (குலை குத்தினான்) மகா பாவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1996
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 351 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |