கல்வெட்டு
திருத்தங்கல்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருத்தங்கல்
ஊர் திருத்தங்கல்
வட்டம் சிவகாசி
மாவட்டம் விருதுநகர்
அமைவிடத்தின் பெயர் திருத்தங்கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருத்தங்கல் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு அருகில் அமைந்த ஊராகும். இதன் பழம் பெயர் தங்கால் என்பதாகும். பழந்தமிழ் இலக்கிய காலத்திலிருந்தே இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக விளங்கி வந்திருக்கின்றது. இவ்வூர்க் குன்றின் மீதுள்ள நின்றநாராயணப் பெருமாள் கோயில் முதலாழ்வார்களாலும் திருமங்கையாழ்வாராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. வைணவப்பதிகள் நூற்றியெட்டில் இதுவும் ஒன்றாகும். நின்றநாராயணப் பெருமாள் கோயிலில் சோழர், பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. இக்கோயிலில் இருந்து இதுவரை படியெடுத்து வெளியிடப் பெற்ற கல்வெட்டுகளில் பழமையானது முதல் பாரந்தக சோழனின் கல்வெட்டேயாகும். இக்கோயிலில் நடைபெற்ற களஆய்வின் போது பெருமாள் திருமுன்னில் முன்மண்டபத்திற்கு வெளிப்புறத்தில் நுழைவாயிலுக்கு அருகில் தரையில் தளமாகப் போடப்பட்ட கருங்கல் ஒன்றில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பெற்றது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதில் குறிக்கப்பெறும் மாறஞ்சடையன் என்ற முற்காலப் பாண்டிய மன்னன் கி. பி. 768 முதல் 815 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த பராந்தக நெடுஞ்சடையனாக இருக்கவேண்டும் என்று கூறலாம். இக்கல்வெட்டு இம்மன்னனின் முப்பத்தெட்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டிருக்கின்றது. கல்வெட்டில் திருத்தங்கலின் பழைய பெயர் வடிவமான திருத்தங்கால் என்பதைக் காணமுடிகின்றது. கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊரானதால் இவ்வூர் ' தேவதானந்திருத்தங்கால்' என்ற அடைமொழியுடன் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் திருவேங்கடநிலைப் பெருமாளையே இன்று நின்றநாராயணப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கின்றனர். இப்பெருமாளுக்குத் திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு ஆடுகள் தானமளித்த அளற்றுநாட்டு நல்லூர்க்கிழவன் பாண்டி நாட்டில் இருந்த ' அளற்றுநாடு' என்ற நாட்டுப்பகுதிக்கு உரிமையுடைய நாட்டுத்தலைவனாக விளங்கியிருக்கின்றான். அளற்றுநாட்டு நல்லூர்க்கிழவன் பெரும்பாலும் பராந்தக நெடுஞ்சடையனின் அரசியல் அதிகாரியாகவும் விளங்கியிருக்க வேண்டும். அரசியல் பணியாகவும் வழிபாட்டு நோக்கத்தோடும் இவன் திருத்தங்கால் வந்த போது மேற்படி கொடையை அளித்திருக்கலாம்.
குறிப்புதவிகள்
திருத்தங்கல்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 236
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு