Back
கல்வெட்டு
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கருங்காலிப்பாடிப்பட்டி
ஊர் கருங்காலிப்பாடிப்பட்டி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் ஐயனாரப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த கருங்காலிப்பாடிப்பட்டி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 14-ஆம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு 18 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கல்லில் வீரனது உருவம் இடப்பக்கம் திரும்பியும் நேராகப் பார்த்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் கேடயமும் வலது கையில் வாளும் இருக்கின்றன. வலது காலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும்உள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும் வலது பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் பதினான்காம் ஆட்சி ஆண்டில் மேல்வேணாட்டைச் சேர்ந்த கருங்காலிப்பாடியை ஆளுகின்ற கொற்றவாசிற் கருசாத்தனார் என்பாரின் மகன் கட்டங்கன்னார் என்பவர் பொற்காடான்னாரின் சேவகரும் நரிப்பள்ளியைச் சேர்ந்த வீரவாண்ணரையர் என்பாரின் மக்களுமான பொன்பானன்னோடு போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001707/TVA_INS_001707_த...

  • TVA_INS_001707/TVA_INS_001707_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 67
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு