| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருவாதவூர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊராகப் போற்றப்படும் பெருமை உடையது. இவ்வூரின் புறத்தே உவாமலை என்றழைக்கப்படும் குன்றுள்ளது. இக்குன்றில் உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளை ஐ.மகாதேவன் 1996-இல் கண்டறிந்தார். பரசு என்ற உபசரால் இந்த உறைவிடம் (குகைத்தளம்) அமைக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். உபசன் என்ற சொல் உபாத்யாயன், சமய ஆசிரியர் என்ற பொருள் உடையது. கல்வெட்டில் உள்ள ‘உபசன்’ என்ற சொல் கொங்கற் புளியங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டிலும் காணப்படுகிறது. இச்சொல் உவச்சரையும் குறிக்கின்றது. இவர்கள் பல்லவர்காலக் கல்வெட்டுக்களில் கோயிலில் வாத்தியம் வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். திருவாய் மொழியில் பரசுதல் என்ற சொல், பாடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a திருவாதவூர், தமிழ்- பிராமி கல்வெட்டு, உவா மலை, சிவகங்கை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a உவா மலை சமண குகைத்தளம் |c திருவாதவூர் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 09°56’43"N |
| 915 | : | _ _ |a 78°18’06"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000014 |
| barcode | : | TVA_INS_000014 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |