கல்வெட்டு
பொற்குணம்-கூட்டுறவு அங்காடி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பொற்குணம்-கூட்டுறவு அங்காடி |
|---|---|
| ஊர் | பொற்குணம் |
| வட்டம் | துரிஞ்சாபுரம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | பொற்குணம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு பொ.ஆ. 869 முதல் 901 வரை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25ஆவது ஆண்டுக் (பொ.ஆ. 894) கல்வெட்டு ஆகும். பல்லவ மன்னன் கம்பபோத்தரைய விக்கிரமன் என்று இதனில் குறிக்கப்படுகின்றான். பல்லவர்களது சிற்றரசர்களாக இப்பகுதியில் கங்கர்கள் இருந்தார்கள். பொற்குணம் என்று அழைக்கப்படும் இவ்வூர் பொற்குன்றம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அது மண்டைக்குள நாட்டின் ஒரு ஊராக முன்பிருந்தது. இதனை கங்கமன்னரில் பிருதிகங்கரைசர் என்பவர் தன் முன்னோர் வழி மரபுரிமையில் (பிரிதிவிராச்சியம்) ஆட்சி செய்து வந்தார்.அவர் இவ்வூரில் ஏற்கெனவே பல்குன்றக் கோட்டத்து கீழ் வேணாட்டுக் காந்தளூர் கூற்றத்து புதனாட்ப்பாடியைச் சேர்ந்த பூதியூர் உடைய கோ என்பவரால் அமைக்கப்படிருந்த ஏரியின் பராமரிப்புக்காக இந்த ஏரியின் கிழக்குத் தூம்பின் நீரோடும் பாதையில் இருந்த இடத்தை பண்படுத்தி (திருத்தி) விளை நிலமாக்கிக் கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. அப்படி திருத்தி விளை நிலமாக்கப்பட்ட நிலத்திற்கு கல்கிலியேரிச் செறு என்று பெயரும் கொடுத்துள்ளார். இந்தக் கொடையான ஏரிபராமரிப்பு நிலத்தை என்றென்றும் பாதுக்காத்து நிலைக்கச் செய்பவர்களின் கால்களைத் தன் தலை மீது வைத்துப் போற்றுவதாகவும் அந்த பிரிதிகங்கரையர் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் ஏரி போன்ற நீர்நிலைகளை காக்க அக்காலத்து மன்னர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததைப் பற்றி கூறும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டு என்றும் கல்வெட்டு ஆய்வறிஞர் சு. இராஜகோபால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 80 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |