Back
சிற்பம்

இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்

இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
சிற்பத்தின் பெயர் இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
சிற்பத்தின்அமைவிடம் சிறை காத்த அய்யனார் கோயில்
ஊர் பள்ளியக்ரஹாரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் சிறைகாத்த அய்யனார் கோயில்
சிற்பத்தின் வகை சுதைச் சிற்பங்கள்
ஆக்கப்பொருள் சுதை
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள சிறை காத்த அய்யனார் கோயில் தமிழர்களின் பழம்பெரும் வீரக்கடவுளான சாத்தன் வழிபாட்டைக் கொண்டு விளங்குகிறது. சாத்தன் என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட தர்மசாஸ்தா மூலவராக கருவறையில் விளங்குகிறார். அய்யனின் வாகனங்களான யானை மற்றும் குதிரை உருவங்கள் சுதைச் சிற்பங்களாக பெரிய வடிவங்களில் செய்யப்பட்டு இக்கோயிலின் வாயிற்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை வீரன், லாடசன்னாசி, காத்தவராயன், பேச்சியம்மன், கருப்பணன், சப்பாணி கருப்பு ஆகிய நாட்டார் தெய்வங்களின் வடிவங்கள் சுதையால் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசப்பட்டு வழிபாட்டில் உள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள பள்ளியக்ரஹாரம் பகுதியில் சிறைகாத்த அய்யனார் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா சன்னதி, மதுரை வீரன், லாடசன்னாசி, காத்தவராயன், உதிரகருப்பண்ண சாமி மற்றும் பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் வழிபாட்டில் உள்ளன. இங்கு அய்யனாரின் வாகனங்களான யானை மற்றும் குதிரை உருவங்கள் சுதைச் சிற்பங்களாக கோயில் வாயிலில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
சிற்பம்

இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்