Back
கல்வெட்டு
சத்திரம் (ஊராளிப்பட்டி)
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சத்திரம் (ஊராளிப்பட்டி)
ஊர் சத்திரம் (ஊராளிப்பட்டி)
வட்டம் நத்தம்
மாவட்டம் திண்டுக்கல்
அமைவிடத்தின் பெயர் நத்தம்-சிங்கம்புணரி சாலை மண்டபம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சத்திரம் (ஊராளிபட்டி) என்ற ஊரில், நத்தம் – சிங்கம்புணரி சாலையின் ஓரத்தில் உள்ள மண்டபங்களின் முன்னதாக நடப்பட்டுள்ள கற்பலகையில் கி. பி. 1781-யைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. இந்த மண்டபங்கள் உள்ள சாலை பழனிக்கு தைப்பூசத்திற்கு நடை பயணம் செல்வோர் செல்லும் பிரதான சாலைகளில் ஒன்று. கல்வெட்டும் தைமாதம் பூச நட்சத்திரத்தில் பட்டயமாக வழங்கப்பட்டிருக்கிறது. சத்திரம் என்று சொல்லப்படும் இரண்டு மண்டபங்கள் மூன்று புறங்களிலும் அடைப்புச் சுவர்களுடனும் முகப்பில் 4, 4 தூண்களையும் பெற்று ஒன்றன் பக்கமாக மற்றொன்று அமைந்து விளங்குபவை. குமாரலிங்க நாயக்கனின் தந்தை ஏறுதாதுலிங்கநாயக்கர் பெயரால் ஒன்றும், தாய் தாதம்மாள் பெயரால் ஒன்றுமாக இச்சத்திரங்கள்கி. பி. 1781ல் அமைக்கப்பட்டன. இச்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ஏற்காபட்டியிலும், அம்மாபட்டியிலும் இருந்தன. இந்நிலங்களின் எல்லைகள் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று வழக்கம் போல் குறிக்கப்படாமல் ஈசானியன், அக்னி, நிருதி (ந்ருருதி) வாயு ஆகியோர் பெயரால் மூலைகளில் குறிக்கப்படுகின்றன. பிரதான திசைகளான கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகியவை விடப்பட்டு வடகிழக்கு (ஈசானன்), தென்கிழக்கு (அக்கினி ) தென்மேற்கு (நிருதி), வடமேற்கு (வாயு) ஆகிய, மூலைத் திசைகள் எல்லைக்குக் குறிக்கப்படுவது அக்கால வழக்கினைக் காட்டுகிறது. எல்லையில் 11, 10, 14 என்று சூலக்கற்கள் நடப்பட்டிருந்தமை குறிக்கப்படுவதை நோக்கினால் எல்லையில் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு சூலக்கல் நடப்படும் வழக்கிருந்தமையும் தெரியவருகிறது,
குறிப்புதவிகள்
சத்திரம் (ஊராளிப்பட்டி)
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

  • TVA_INS_001850/TVA_INS_001850_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 131
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு