| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மறுகால்தலை |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a பஞ்சபாண்டவர் படுக்கை குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் 40 செ.மீ. உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும். சமஸ்கிருதத்தில் ‘கஞ்சணம்' என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இங்குப் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது. காசிபன் என்ற சொல்லில் உள்ள ‘சி’ என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும். இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும் கல்வெட்டுப் பகுதிக்கும் இடையில் சுமார் 40 அடி இடைவெளி இருந்ததால் கீழிருந்து படிக்க ஏதுவாகப் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். தற்போது தரைத்தளம் உயர்ந்துள்ளது. |
| 653 | : | _ _ |a மறுகால்தலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c மறுகால்தலை |d திருநெல்வேலி |
| 914 | : | _ _ |a 8.8095808 |
| 915 | : | _ _ |a 77.842803 |
| 995 | : | _ _ |a TVA_INS_000055 |
| barcode | : | TVA_INS_000055 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |