கல்வெட்டு
மாங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மாங்குளம் |
|---|---|
| ஊர் | மீனாட்சிபுரம் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நீண்ட ஒரே வரியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கணி நந்தஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸுதன் என்பவன் நினைவுப் படுக்கை அமைத்தான் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கொள்ளலாம். ஸுதன் என்ற சொல்லிற்கு மகன் என்று பொருள் கொண்டுள்ளனர். ஐராவதம் மகாதேவன் கணி நந்தஸிரிய் குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான முத்துக்களை ஆய்வு செய்யும் காண்காணிப்பாளர் அந்தை ஸுதன் என்பவன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கூறியுள்ளார். இவர் கழிதிக என்ற சொல்ல காழிதிக என்று படித்து காழ் என்றால் முத்து என்றும், அதிகன் என்றால் கண்காணிப்பாளன் என்று பொருள் கண்டுள்ளார். இதனால் முத்துக் கண்காணிப்பாளனான அந்தை அஸுதன் என்பவன் பிணவு (குகை) அமைத்தான் என்று கூறுகின்றார். இக்கல்வெட்டில் வணிகர்களுக்குரிய பட்டங்களில் ஒன்றாகிய “காவிதி“ என்ற சொல் வருவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிப்பழடப்படும் “நிகமம்“ வணிக நகரத்தினைக் குறிக்கும் பழஞ்சொல்லாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 176 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |