கல்வெட்டு
இராமநாதபுரம் ஊர்ப்புறம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | இராமநாதபுரம் ஊர்ப்புறம் |
|---|---|
| ஊர் | இராமநாதபுரம் |
| வட்டம் | வேடசந்தூர் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| அமைவிடத்தின் பெயர் | இராமநாதபுரம் ஊர்ப்பறம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இவ்வூரின் புறத்தே உள்ள ஒரு பாறையில் அழகிய தமிழ்க் கவிதை வடிவில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.மாறஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனுடன் இடவை போரில் கலந்து கொண்ட பராந்தகப்பள்ளிவேல் என்னும் நக்கன்புள்ளான், என்பவன் தன் பெயரில் புள்ளனேரி என்று ஓர் ஏரி வெட்டுவித்து கரைகளில் கல் பதித்து குமிழி ஒன்று கட்டினான்.ஆனால் அப்பணி முற்றுப்பெறும் முன்னர் அவன் மரணமடைந்தான். அதை செய்த கல் தச்சனும் இறந்தான். தச்சனுடைய மகன் பணியை நிறைவு செய்தான். புள்ளன் மகன் நக்கன் அவனுக்கு தலைநீர் பாய்ந்து விளைகின்ற பூமியைக் கொடையாகக் கொடுத்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |