சிற்பம்

சமண தீர்த்தங்கரர்

சமண தீர்த்தங்கரர்
சிற்பத்தின் பெயர் சமண தீர்த்தங்கரர்
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
பத்மாவதி இயக்கி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இயக்கி என்பது யக்ஷி என்பதன் தமிழ் வடிவம். இயக்கியர் பெண் தெய்வங்களாக சமண மதத்தில் போற்றப்படுவர்கள். இவர்கள் தொல்வழிபாட்டின் தாய்த் தெய்வங்களாவர். இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. இவர்கள் சாசன தேவதைகள். அதாவது சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள். தொல்வழிபாட்டின் பல கூறுகளை சமண, பௌத்த மதங்கள் தங்களுக்குள் இணைத்துக் கொள்ளும் போது தவிர்க்கவியலாத நிலையில் தொல்குடி மக்களின் பெண் தெய்வங்களையும், வீரர்களாக மாய்ந்து தெய்வ நிலையை அடைந்த ஆண் தெய்வங்களையும் தங்கள் வழிபாட்டிற்குள் கொண்டு வர வேண்டியதாயிற்று. இவ்வாறாக தொல்குடிகளின் ஆண், பெண் தெய்வங்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் இயக்கன், இயக்கியாக உருமாறினர். தொல்குடிகளின் கடவுள்களான இவர்களே தீர்த்தங்கரர்களை வழிபட்டு நிற்கும் பொழுது தன்னிலையாக தொல்குடி மக்களும் சமண சமயத்தை போற்றுவர் என்ற காரணியில் இந்த இணைப்பு உருவாக்கம் ஏற்பட்டது. இந்நிலையானது சமணத்தில் மட்டுமல்ல, பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய மதங்களும் இவ்வாறே பழங்குடி மக்களின் தெய்வங்களை தன்னுள் இணைத்துக் கொண்டு, தங்களின் கடவுள்களை உயர்த்தின என்பது கண்கூடு. மேற்கண்ட இயக்கி பெண் தெய்வம் பத்மாவதி. இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். (கோழி இவரது வாகனம்). இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார். தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் இவரது தோற்றம் இருக்கும். பரவலாக பல கோயில்களில் இவரது உருவச் சிலைகளைக் காணமுடிகின்றது. நாகர் இனத்தைச் சேர்ந்தவராக இவர் இருக்கலாம் எனபதைக் காட்டும் வகையில் சிகரத்தில் பார்சுவநாதரைப் போலவே நாகக் குடையுடன் பத்மாவதி இயக்கியின் திருவுருவச் சிலைகளும் காட்சியளிக்கின்றன. பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்தில் பத்மாவதி இயக்கிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது. கழுகு மலையில் காணப்படும் பத்மாவதி இயக்கி பத்மத்தின் மேல் சுகாசனத்தில் அமர்நதுள்ளார். இத்தெய்வத்திற்கு நான்கு கைகள் காட்டப்பட்டுள்ளன. தலைக்கு மேல் நாகம் குடைபிடிக்கிறது. தேவியின் இருபுறமும் அவரது பணிப் பெண்கள் சாமரம் வீசிக் கொண்டு நின்றுள்ளனர்.
குறிப்புதவிகள்
சமண தீர்த்தங்கரர்
சிற்பம்

சமண தீர்த்தங்கரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்