சிற்பம்
சமண தீர்த்தங்கரர்
சமண தீர்த்தங்கரர்
சிற்பத்தின் பெயர் | சமண தீர்த்தங்கரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
ஊர் | கழுகு மலை |
வட்டம் | கோவில்பட்டி |
மாவட்டம் | தூத்துக்குடி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாங்குதளத்துடன் கூடிய பீடத்தில் சமண தீர்த்தங்கரர் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. சமண முனிவரின் இருபுறமும் இருவர் தலையில் மகுடம், நீண்ட ஆடை, அணிகலன்களுடன் நின்று கொண்டிருக்கின்றனர். இடது புறம் நிற்பவர் வலது கையை உயர்த்தி வியப்பு முத்திரை காட்டுகிறார். பின்புறம் இருபுறமும் யாளிகள் தாங்கும் சாய்மானத்தின் மேல் இருவர் சாமரர் வீசுகின்றனர். மேலே சூரிய, சந்திரர்கள் பறந்த நிலையில் வாழ்த்தொலிக்கின்றனர். இவர்களின் நடுவில் யானையின் மேல் இருவர் அமர்ந்துள்ளனர். அவர்கள் இந்திரனும் இந்திராணியுமாய் இருக்கலாம். தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் உள்ள குடைக்குப் பின்னால் இலைக்கருக்கு வேலைப்பாடு காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சமண தீர்த்தங்கரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |