கல்வெட்டு
ஆனைமலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ஆனைமலை |
|---|---|
| ஊர் | நரசிங்கம் |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
குகைத் தளத்தின் முகப்பு நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக இக்கல்வெட்டு இருவரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள். இவம் என்னும் சொல் இபம் என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மறுவடிவமாகும். யானை என்பது இதன் பொருள். உறையுள் என்பது உறைவிடம் என்பதைக் குறிக்கும். பாதந்தான் என்பதை பாய் அல்லது படுக்கை தந்தான் எனக் கொள்ளலாம். ஏரி என்னும் ஊரைச் சேரந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அட்டவாயி என்பதன் தமிழ்வடிவமாக அத்துவாயி என்பதைக் கொள்ளலாம். அர்த்தம் உரைப்பவன், சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம். அரட்டன் என்பது அத்துறவியின் பெயராகவும், காசிபன் என்பது கோத்திரப் பெயராகவும் கொள்ளப்படும். அரிதன், அரட்டகாயிபன் என்னும் இருதுறவியருக்கான தங்குமிடமாக இக்குகைத் தளத்தைக் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 193 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |