கல்வெட்டு
அரிட்டாப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அரிட்டாப்பட்டி
ஊர் அரிட்டாபட்டி
வட்டம் மதுரை வடக்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கழிஞ்சமலை சமண குகைத்தளம்
குறிச்சொல்
சுருக்கம்
அரிட்டாபட்டி மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியன் காலத்து குடை வரைக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன் மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
குறிப்புதவிகள்
அரிட்டாப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_000098/TVA_INS_000098_அ...

  • TVA_INS_000098/TVA_INS_000098_அ...

  • TVA_INS_000098/TVA_INS_000098_அ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 312
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய கல்வெட்டு