கல்வெட்டு
வேதாளை ஜூம்மா பள்ளவாசல்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வேதாளை ஜூம்மா பள்ளவாசல் |
|---|---|
| ஊர் | வேதாளை |
| வட்டம் | கீழக்கரை |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | வேதாளை ஜூம்மா பள்ளவாசல் நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சேதுபதி நாட்டின் மிகச்சிறந்த வள்ளலாகத் திகழ்ந்தவர் கீழக்கரை பெரிய தம்பி மரைக்காயர் என்ற பெரு வணிகரது குமாரர் சேகு அப்துல் காதிர் மரைக்காயர் ஆவர். இவரது இளவல் சேகு இபுறாகிம் மரைக்காயரும் வணிகராவர். பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சிறந்திருந்த கிழக்குக் கடற்கரை யோர வணிக நகரமாகிய வேதாளையில் இருந்தவர். இந்த வணிகரது குடும்பத்தினர் திருப்பணியாக விளங்கும் வேதாளை ஜூம்மா பள்ளி வாசலை அடுத்த மைய வாடியில் (இடுகாடு) இந்த வணிகரது அடக்க இடம் மட்டும் கல் கட்டு அமைப்பாக அமைந்துள்ளது. காலத்தின் அழிவைத் தாங்கி அழிந்தும் அழியாமலும் உள்ள இந்த மண்டபம் 12 அடி நீளம் 10 அடி அகலம் கொண்டு செவ்வக அமைப்பில் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் அழகிய மண்டபமும் அதனையடுத்து சேகு இபுறாகிம் மரைக்காயரது பூத உடலைத் தாங்கியுள்ள சிறு அறையும் அமைந்துள்ளது. இஸ்லாமியரது வழக்கப்படி இந்த அடக்க இடத்தில் இறந்தவரது தலைப் பகுதியில் (வடக்கு ஒரு கல்லும், கால் பகுதியில் (தெற்கு ஒரு கல்லுமாக அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய இரண்டு கற்கள் நாட்டப்பட்டுள்ளன. இந்தக்கற்களின் மகுடமாக திருவாசி போல அமைக்கப்பட்டு இரட்டை குடை உருவங்கள் காணப்படுகின்றன. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டு அடி ஆழத்தில் மணல் மூடியுள்ள அந்தக் கற்களில் வடக்குக் கல்லில் அரபி மொழித் தொடர்களும், தெற்குக் கல்லில் தமிழ்க் கல்வெட்டும் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 82 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |