கல்வெட்டு
வீரணம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வீரணம் |
|---|---|
| ஊர் | வீரணம் |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | அய்யனாரப்பன் கோயில், கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலை. உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் கம்பவர்மனது பதினான்காவது ஆட்சிஆண்டில், பாணஅரசன் வயிரமேகன் வாணகோப்பாடியையும், இலாடைப்பாடியையும், மிலாட்டையும், சோழநாட்டைச் சேர்ந்த காவிரியின் வடகரையிலுள்ள பகுதிகளையும் ஆள்கின்றபோது வேணாடுமுந்நூறையும், எயில்நாடு ஐந்நூறையும் ஆண்டு வந்த நந்திப்பெருமானார் மகன் அக்கழிமல்லன் என்பார் வெண்ணத்தையும், சாத்தனூரையும் ஆண்டு வந்தார். அச்சமயம், மங்கள நாட்டைச் சேர்ந்த மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கியது. அப்போது வெண்ணத்தைச் சேர்ந்த மழநாடர் மொடப்பன், பின்பு சென்று போரிட்டு வேணாட்டெல்லையில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. இக்கல்லுக்குப் பக்கத்திலுள்ள கல்லில் குறிக்கப்பட்டுள்ள காராச்செங்கன் வீரமரணம் அடைந்ததையும் தெரிவிக்கும் வகையில் அவனுடைய பெயரும் இக்கல்லில் குறிக்கப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 98 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |