சிற்பம்
பூத கணம்
பூத கணம்
சிற்பத்தின் பெயர் | பூத கணம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
ஊர் | கழுகு மலை |
வட்டம் | கோவில்பட்டி |
மாவட்டம் | தூத்துக்குடி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
தாளம் இசைக்கும் பூத கணம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள பூத வரியில் உள்ள பூத கணங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. அவற்றுள் ஒன்றான இந்த பூத கணம் கைகளில் தாளக் கருவியினைக் கொண்டு தாளமிசைக்கிறது. சிரித்த முகத்துடன் காட்டப்பட்டுள்ள இக்கணம் ஜடாபாரம் கொண்டு, காதுகளில் மகர குண்டலமும், பத்ர குண்டலமும் அணிந்து, கழுத்தில் மணியாலான அட்டிகையும், கைகளில் பட்டையான கங்கணங்களும், பானை வயிற்றில் வேலைப்பாடற்ற பட்டையான உதரபந்தமும், மார்பில் துணியாலான முப்புரிநூலும் அணிந்துள்ளது. இசையோடு இயைந்து தாளமிடும் மகிழ்ச்சி அதன் பெரிய கண்களில் தெரிகின்றது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பூத கணம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |