கல்வெட்டு
கீழ்ப்பெரும்பாக்கம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கீழ்ப்பெரும்பாக்கம் |
|---|---|
| ஊர் | கீழ்ப்பெரும்பாக்கம் |
| வட்டம் | விழுப்புரம் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள தனிக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகருக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனிக்கல். கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய இம்முருகன் சிற்பம் கருங்கல் பலகையில் கருக்கப்பட்டுள்ளது. இதன் மேற்புறம் அரைவட்ட வடிவத்துடன் உள்ளது. சிற்பத்தின் உயரம் 108 செ.மீ. அகலம் 62 செ.மீ. கனம் 20 செ.மீ. கருங்கல் பலகையைச் சுற்றி அழகிய வேலைப்பாடுடன் கரடு வெட்டப்பட்டுள்ளது. சிற்பம் திறந்த வெளியில் இருந்தாலும் இன்றும் நல்ல நிலை யில் உள்ளது. தாமரை மலர் மீது சுகாசன நிலையில் அமர்ந்த முருகனின் வலக்கால் மடக்கியும் இடக்கால் தொங்கிய வண்ணமும் உள்ளன. தலையில் கரண்ட மகுடம் உள்ளது. செவிகளை மகர குண்டலமும், கழுத் தினைக் கண்டிகையும், கைகளைக் கடகமும், கால்களைக் கழல்களும், வயிற்றுப் பகுதியை உதரபந்தமும் அலங்கரிக்கின்றன. இவ்வனைத்து அலங்காரங்களுடன் முருகன் சிறந்த வீரனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். மேல் வலக்கையில் சிறிய அளவிலான வஜ்ஜிராயுதமும், முன் வலக்கையில் தாமரை மொட்டும் உள்ளன. இடது முன் கை தொடையில் ஊன்றியுள்ளது. முருகனின் கக்கங்களுக்கு கீழேயும் தொடைக்கு மேலும் உள்ள குறுகிய இடத்தில் நான்கு வரிகளில் கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. எழுத்துகள் வட்டெழுத்தும் தமிழும் கலந்துள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், 1999
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 115 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |