கல்வெட்டு
புனல்காடு
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | புனல்காடு |
|---|---|
| ஊர் | நரசிங்கபுரம் |
| வட்டம் | சித்தய்யன் கோட்டை |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| அமைவிடத்தின் பெயர் | நரசிங்கபுரம் மலையடிவாரம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திண்டுக்கல் அருகே நரசிங்கபுரம் மேற்கே உள்ள புணல்காடு பகுதியில் கி.பி.10 ம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக்கள் பதியப்பட்ட செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் ஆட்டி பிழிந்தெடுக்கும் செக்கு உரலில் கல்வெட்டுகளை பொறிப்பதுவும் பண்டு பெரு வழக்காயிருந்தது. பெரும்பாலும் திருக்கோயில்களில் விளக்கெரிக்க எண்ணெய் எடுக்கப் பயன்படும் செக்கு உரல்களில் இவ்வாறான கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. அவ்வகையில் இக்கல்வெட்டும் செக்கு உரலில் காணப்படும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இங்கு கிடைத்த செக்கு உரல் மூன்று அடி ஆழத்தில் பாறையில் வெட்டப்பட்டுள்ளது. அந்த உரலில் 'ஸ்ரீ முது நீர் முரி மீ மங்கரை யுகந்து தட்டான் ஆசிரியம் பாறைய் இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு' என குறிக்கப்பட்டுள்ளது. முது நீர் முரி மீ மாங் கரை என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லரைகுறிக்கும். ஆசிரியம் என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும். ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்குவந்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். இவர் மக்களின் பயன்பாட்டிற்காக செக்கு உரல் வெட்டி தந்துள்ளார் என இந்த சான்று கூறுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |