| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சமுத்திராபட்டி |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992 |
| 520 | : | _ _ |a திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சமுத்திராபட்டி ஊருக்கு வடமேற்கில் உள்ள ஒரு காட்டில் உள்ள தனிக்கல்லில் வணிகக்குழுக்களில் ஒன்றான அஞ்ஞூற்றுவர் கல்வெட்டொன்று கல்லின் நான்கு பக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. தென்னாட்டிலும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரந்த அளவில் வாணிகம் செய்து வந்த பெருங்குழுவான அஞ்ஞூற்றுவர் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பல கிடைத்தாலும் 11-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்குழுவின் முழு மெய்க்கீர்த்தியோடு கிடைக்கும் முதல் தமிழ்க்கல்வெட்டு இது எனலாம். இப்பெருங்குழுவின் ஒரு பிரிவான அழகிய பாண்டிய பெருநிரவி என்ற குழு கூடி பனியாநாடு என்ற பகுதியை நானாதேசி எறிவீரபட்டணம் என்ற வீரதாவளமாக மாற்றியது. இவ்வணிகக் குழுவுக்குள்ளாக ஏதோ உட்பூசல் இருந்ததாகத் தெரிகிறது. உட்பூசலில் வெற்றி பெற்ற பிறகு மேற்சொன்ன வீரதாவளம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டு தற்போது மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வணிகர், வணிகக் குழு, ஐந்நூற்றுவர், அஞ்ஞாற்றுவர், நானாதேசி, எறிவீரபட்டணம், பாண்டிய நாடு, பாண்டிநாட்டு தாவளம், வீரதாவளம், வணிகக் கல்வெட்டு, ஆவணம் இதழ் 2 |
| 752 | : | _ _ |a மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை |c சமுத்திராபட்டி |d திண்டுக்கல் |f நத்தம் |
| 914 | : | _ _ |a 10.216046 |
| 915 | : | _ _ |a 78.288002 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001849 |
| barcode | : | TVA_INS_001849 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |