Back
கல்வெட்டு
அதிரணசண்டேசுவர பல்லவேஸ்வர க்ருஹம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அதிரணசண்டேசுவர பல்லவேஸ்வர க்ருஹம்
ஊர் சாளுவன்குப்பம்
வட்டம் மாமல்லபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் அதிரணசண்டேசர் குகை
குறிச்சொல்
சுருக்கம்
மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை எனப்படும் யாளி மண்டபம் மற்றும் அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற இரண்டு பல்லவ வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இக்குடைவரை இராஜசிம்ஹனின் விருதுப் பெயரான அதிரணசண்ட (அதி - மிகை , ரண - போர்களம், சண்ட - வல்லவன்) என்ற பெயருடன் தொடர்புடையது. மூன்றடுக்குத் தரையமைப்புடன் கூடிய அதிரணசண்ட பல்லவேஸ்வரம் மண்டபம் முகப்பு, மண்டபம் மற்றும் கருவறை என்று பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைந்த இரண்டு முழுத் தூண்களையும், இரண்டு அறைதூண்களையும், வளைமுக போதிகைகளையும், உத்திரம், வாஜனம், வாலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தார உறுப்புகளையும் பெற்றுள்ளது. கபோதத்திற்கு மேலே சிறு சிறு குழிகள் பந்தல் போடுவதற்காக வெட்டப்பட்டுள்ளன போல் தெரிகிறது. கருவறையின் நடுவில் அமைத்த குழியில் (socket) 16 பட்டைகளுடன் அமைத்த இலிங்கமொன்று பொருதப்பட்டுள்ளது. கருவறைப் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது கருவறையின் வாயில் முன்பு இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் பக்கத்திற்கொன்றாகக் காணப்படுகின்றன. அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹத்தில் நுழைவாயிலின் முகப்பிலிருந்து அரைத்தூண்களையொட்டி வெளிப்புறம் நோக்கி சரியும் மண்டபத்தின் இடது மற்றும் வலது புற பக்கச் சுவர்களில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இடது புறம் 16 வரிகளுடனும் 6 செய்யுட்களுடனும் கூடிய நாகரிக் கல்வெட்டும் வலப்புறம் 17 வரிகளுடனும் 7 செய்யுட்களுடனும் கூடிய பல்லவ கிரந்தக் கல்வெட்டும் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்களில் காணப்படுவது சிறு சிறு வேறுபாடுகளுடன் கூடிய ஒரே சம்ஸ்கிருத சுலோகமாகும். ஆனால் இரண்டு வெவ்வேறு வரி வடிவங்களில் (எழுத்துகளில்) பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவ கிரந்தக் கல்வெட்டில் இடம்பெறும் 7 செய்யுள்களுள் முதலிரண்டு செய்யுள்கள் அப்படியே மாமல்லபுரம் தர்மராஜ மண்டபத்திலும், கணேச இரதத்திலும் அமைந்துள்ள கல்வெட்டுக்களில் முறையே 8 மற்றும் 9 ஆம் செய்யுள்களாகவும், நான்காம் செய்யுள் அதே வரிசையில் நான்காம் செய்யுளாகவும் இடம்பெறுகின்றன. பல்லவ மன்னன் இராஜசிம்ஹன் ஐந்தாம் செய்யுளில், “இப்பூவுலகை ஆள்பவர்களின் தலைவராகிய அதிரணசண்ட (Athiranchandah), இக்கோவிலை அதிரணசண்டேஸ்வரருக்கு (Athiranachandeshvara) கட்டுவித்தார். இங்கு பசுபதி (Pashupathi) மலைமகளான (GiriTanaya) பார்வதியுடனும், குகனாகிய ஸ்கந்தனுடனும் (Skanda) (முருகன்), கணங்கள் (gana) சூழ தங்கி மகிழ்வாராக“ என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
அதிரணசண்டேசுவர பல்லவேஸ்வர க்ருஹம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_INS_000100/TVA_INS_000100_ச...

  • TVA_INS_000100/TVA_INS_000100_ச...

  • TVA_INS_000100/TVA_INS_000100_ச...

  • TVA_INS_000100/TVA_INS_000100_ச...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 145
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 6

தொடர்புடைய கல்வெட்டு