கல்வெட்டு
குன்னக்குடி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குன்னக்குடி |
|---|---|
| ஊர் | குன்னக்குடி |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| அமைவிடத்தின் பெயர் | ஞானியார் மடம் சமண குகைத்தளம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நீர்வடிவிளிம்பின் மறுபக்கம் உள்ளது. மூன்று எழுத்துக்கள் தெரிகின்றன. மண்டபக் கட்டத்தினுள் மேலும் எழுத்துக்கள் மறைந்துள்ளன. இது முன் கல்வெட்டின் தொடர்ச்சியாகலாம். நீர்வடி விளிம்பு இவ்விடத்தில் பாறையின் வடிவிற்கேற்ப உட்சென்று வெளிவருவதால் இக்கல்வெட்டு முன் கல்வெட்டிற்கு அதிக இடைவெளிவிட்டு வெட்டப்பட்டுள்ளது என்றும் கருதத் தோன்றுகிறது. இதுவும் எழுத்துக்கள் கண்ணாடியில் தெரிவது போன்று இடம் வலமாக, மேல் கீழாகப் பொறிக்கப்பட்டதாகும். இதன்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாகும். “ஊறு து“ என்பது வெளித்தெரியும் கல்வெட்டுச் சொல்லாகும். ஊறு என்பதில் ‘ற்’ சேர்த்து ஊற்று என்று கொள்ளலாம். முன் கல்வெட்டில் சொல்லப்பட்டவர் நீர் ஊற்று அமைத்தார் என்பது இதன் பொருளாகலாம். இக்குகைத்தளத்திற்குச் செல்லும் வழியில் பாறையில் சதுரவடிவில் ஒரு சுனை வெட்டப்பட்டு இன்றும் நீர் தேங்கிப் பயன்பாட்டில் உள்ளது. இரண்டாவது கல்வெட்டில் சொல்லப்படும் ஊறு என்ற ஊற்றினை இது நினைவுபடுத்துகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 119 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |