| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருப்பரங்குன்றம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a முதல்பகுதி தடித்த எழுத்துக்களாகவும் இரண்டாம் பகுதி மெலிந்த எழுகத்துக்களாகவும் உள்ளன. நடுவில் ஒரு குத்துக்கோடு உள்ளது. எருகாடுர் இழ குடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுசாத்தன் இந்தக் கற்படுக்கையைச் செய்தான் என்று கொள்ளலாம். ‘எருகாடுர்’ என்ற சொல்லில் 'க்' மெய்யும், ‘ஆய்சயன்’ என்பதில் ‘ச்’ ஒற்றும், ‘நெடுசாதன்’ என்பதில் ‘த்’ மெய்யும் சேர்த்து முறையே எருக்காடுர், ஆய்ச்சயன், நெடுசாத்தன் என்று கொள்ள வேண்டும். எருகாடூர் என்பது சிவகங்கை மாவட்டம் திருமலை தமிழ்-பிராமி கல்வெட்டிலும், பிள்ளையார்ப்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் (எக்காடுர்) இடம்பெற்றுள்ளது. ஒரு வேளை இவ்வூர் திருப்புத்தூர் வட்டத்தில் அமைந்திருந்த ஓர் ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலைப் பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார்.எக்காட்டூர், எருக்காடுர் இரண்டும் ஒன்றே எனக் கருதலாம். இழகுடும்பிகன் என்னும் சொல்லை இழ, குடும்பிகன் என இரண்டாகப் பிரிக்கலாம். குடும்பிகன் என்பது குடும்பத் தலைவர் எனப் பொருள்தரும். கிரஹபதி என்னும் வடசொல்லின் தமிழ் வடிவமே குடும்பிகன் என்பதாகும். இழ அல்லது ஈழ என்பது கள் இறக்கும் தொழிலைக் குறிக்கும். எனவே இவனைக் கள் இறக்கும் குடும்பத்தின் தலைவன் எனக் கருதலாம் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். போலாலயன் என்பது கொடையாளியின் இயற்பெயர் ஆகும். ஆய்சயன நெடுசாத்தன் என்பதும் இயற்பெயர் என்றே கொள்ளத்தகும். |
| 653 | : | _ _ |a திருப்பரங்குன்றம், தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c திருப்பரங்குன்றம் |d மதுரை |f திருமங்கலம் |
| 914 | : | _ _ |a 09°52’41"N |
| 915 | : | _ _ |a 78°03’57"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000054 |
| barcode | : | TVA_INS_000054 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |