கல்வெட்டு
நவலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் நவலை
ஊர் நவலை
வட்டம் தருமபுரி
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் எட்டு கொட்டாய் ஏரிக்கரை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இந்நடுகல்லில், வீரன் ஒருவன் நின்ற நிலையில், வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் ஏந்தியுள்ளான். இவனது தலைமுடி தோளின் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. இவ்வீரன் மெலிந்து. மிக உயரமாக உள்ளான். இவனது வலக்காலுக்கு அருகில் ஒருசிவலிங்கமும், இடக்காலுக்கு அருகில் ஒரு கெண்டியும் உள்ளன. இவனது வலப்புறத்திலும், தலையின் மேற்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவமார பருமானது மூன்றாவது ஆட்சி ஆண்டில் கந்தவாண்ணதியரையர் புறமலை நாடாண்ட போது வாணபெருமன் என்பவன் கூடல் என்ற ஒரு ஊரைத் தாக்கினான். அப்பொழுது சாதவப்பன்னார் படையைச் சேர்ந்த உண்ணி என்ற இவ்வீரன் இறந்து பட்டான். அவனுக்கு இந்நடுகல் எடுக்கப்பட்டது.
குறிப்புதவிகள்
நவலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 48
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு