Back
கல்வெட்டு
சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
ஊர் சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் இட்டேரி
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டில் மன்னன் பெயர் சிதைந்து விட்டது. அம்மன்னன் கங்கநாடு, கோயினூர் நாடு, வேளால நாடு முதலான நாடுகளை ஆண்ட பொழுது இந்தரையன் என்பவன் குதிரையோடு வந்து வடவல்லூரை அழித்தான். அவனை பூங்குடி வடுகன் என்பான் எதிர்த்துச் சென்று குதிரையைக் குத்தித் தானும் பட்டான். அவன் பீடும், பெருமையும் புலப்பட எடுக்கப்பட்டது இந்நடுகல். இந்நடுக்கல்லின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் வீரன் ஒருவன் வலக்கையில் குறுவாளை ஓங்கிய நிலையில் காணப்படுகின்றான். வில் பிடித்த இடக்கை சிதைந்து விட்டது. வீரனுடைய காலடியில் சிமிழும் முன்புறத்தில் அவன் குதிரை குத்திப்பட்டதற்கு அடையாளமாக குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனுடைய ஆடை அணிகலன்கள் உருவத்தின் சிதைவால் புலனாகவில்லை.
குறிப்புதவிகள்
சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 59
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு