சிற்பம்

மகாவீரர்

மகாவீரர்
சிற்பத்தின் பெயர் மகாவீரர்
சிற்பத்தின்அமைவிடம் பசும்பொன் கிராமம்-ஊர் நிலம்
ஊர் பசும்பொன்
வட்டம் கமுதி
மாவட்டம் இராமநாதபுரம்
அமைவிடத்தின் பெயர் பசும்பொன் கிராமப்பகுதி
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
a:1:{i:0;s:1737:"சதுரவடிவமான தற்போது அமைக்கப்பட்டு மேடையின் மீது இச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. மகாவீரர் அமர்ந்துள்ள தாங்குதளம் தென்படவில்லை. மகாவீரர் முக்குடையின் கீழ் தியானகோலத்தில் கண்களை மூடி, திக்குகளையே ஆடையாகக் கொண்டவராக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். முக்குடை சிதைவுபட்டுள்ளது. தீர்த்தங்கரரின் இருபுறமும் இரு சாமரவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். சுருள்வடிவாய் காட்டப்பட்டுள்ள அசோக மரத்தின் கீழ் சிரஸ்திக சுருள் முடியுடன் கூடிய தலையணி கொண்டவராய், நீண்ட தொள்ளைக் காதுடையராய், அமைதி தவழும் முகத்துடன் காட்டப்பட்டுள்ளார். அன்னாரின் தலையின் பின்னால் இரு ஒளிவட்டங்கள் போல் தெரிகின்றன. அல்லது அவை அமர்ந்துள்ள ஆசனத்தின் மேற்பகுதியாகவும் இருக்கலாம். ";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தமிழகத்தின் பல ஊர்களில் சமணக் கோயில்கள் அமைந்துள்ளன. கோயில்கள் தவிர்த்து சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உதிரிச் சிற்பங்களாக ஆங்காங்கே மக்களால் வழிபாட்டிலும், சிதைந்த நிலையில் வழிபாடற்றும் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பசும்பொன் என்னும் சிற்றூரில் காணப்படும் மகாவீரரின் சிற்பமும் குறிப்பிடத்தகுந்தது.
குறிப்புதவிகள்
மகாவீரர்
சிற்பம்

மகாவீரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்