கல்வெட்டு
கருங்காலக்குடி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கருங்காலக்குடி |
|---|---|
| ஊர் | கருங்காலக்குடி |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | பஞ்சபாண்டவர் குட்டு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
“எழைய் ஊர் அரிதின் பளி“ என்பது கல்வெட்டின் வாசகமாகும். பளி என்பதில் ‘ள்’ மெய் சேர்த்து பள்ளி என்று கொள்ள வேண்டும். இப்புனித இடம் மற்றும் கல்படுக்கை எழையூரைச் சேர்ந்த அரிதி என்பவரால் வழங்கப்பட்டது என்பதே இக்கல்வெட்டின் பொருளாகும். எழைஊர் என்பது இடையூர் என்பதின் திரிபு என்பர். இடையர்கள் (கால் நடை மேய்ப்புச் சமூகத்தினர்) வாழும் இடமாக இருந்தமையால் இடையூர் எனப்பட்டிருக்கலாம். ஏடகம்-ஏழகம், நாடி-நாழி என்பது போல இடையூரே மக்கள் வழக்கில் எழையூர் என மரூவி வழங்குகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். குற்றெழுத்தில் நெடிலைக் குறிக்கும் பக்கக்கோடு இருப்பினும் இதனை மாங்குளம், அரிட்டாபட்டி கல்வெட்டுகளை ஒப்ப நெடிலையும் குறிலாகப் படித்துப் (பட்டிபுரோலு முறைப்படி) பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 132 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |