கல்வெட்டு
வேங்கடேசப் பெருமாள் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வேங்கடேசப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | ஆதிவராகநத்தம் |
| வட்டம் | சிதம்பரம் |
| மாவட்டம் | கடலூர் |
| அமைவிடத்தின் பெயர் | வேங்கடேசப் பெருமாள் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு அருகில் கி.பி. 1012ம் ஆண்டில் ராஜேந்திரசோழனால் வெளியிடப்பட்ட 5 கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் ராஜேந்திரசோழன் தனது தாய் திரிபுவனமாதேவி என்கிற வானவன் மாதேவிக்காக கட்டிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜேந்திரசோழன் தனது தாயின் நினைவாக கட்டிய சிவன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு, வெங்கடேச பெருமாளுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டு இருக்கலாம். கி.பி. 16- 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த வெங்கடேசப் பெருமாள் கோயிலில் உள்ள தூண்கள், அதிட்டானத்தின் உறுப்புகளான ஜகதி, முப்பட்டை குமுதம், குடம், பலகை, உத்தரம் போன்ற பகுதிகளில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கலைப் பாணியின் தாக்கம் காணப்படுகிறது. கோயிலின் முக மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில், பரதூர் அபராஜித விண்ணகர் என்ற வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இதன் மூலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோயில் ஒன்று புவனகிரி அருகே உள்ள பரதூரில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இக்கோயிலைப்பற்றி கி.பி. 1178- 1218ம் ஆண்டு சோழப் பேரரசின் மன்னனாக விளங்கிய மூன்றாம் குலோத்துங்கசோழன் தாம் வெளியிட்டுள்ள கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஆய்வுக்குரிய ஒன்றாக உள்ளது. இதன் மூலம் பரதூரில் கட்டப்பட்ட பெருமாள் கோயிலின் பாகங்களை கொண்டே புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் பெருமாள் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
-
TVA_INS_000385/TVA_INS_000385_ச...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 67 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |