கல்வெட்டு
ஆனந்தூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ஆனந்தூர் |
|---|---|
| ஊர் | ஆனந்தூர் |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | புலிக்குத்திக்கல் கொல்லை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இந்நடுகல் அளவில் மிகப்பெரியது. வீரனின் முன்பாக புலி ஒன்று பாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் இருகைகளாலும் பிடித்துள்ள ஒரு ஈட்டியால் புலியைக் குத்துகிறான். ஈட்டியின் முனை புலியின் உடலில் பாய்ந்து மறுபுறத்தில் வந்துள்ளது. வீரனது இடையில் கச்சையும், வாளும் உள்ளன. புலியின் முன்னும், பின்னுமாக இரண்டு வேட்டை நாய்கள் காட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு இச்சிற்பத்தின் இடப்புறத்தில் சிதைந்த நிலையில் உள்ளது. கடைசி இரண்டு வரிகள் கல்வெட்டின் துவக்கத்தில் உள்ளன. வீரனைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிய இயலவில்லை.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 110 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |