கல்வெட்டு
கெரஹோடஹள்ளி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கெரஹோடஹள்ளி |
|---|---|
| ஊர் | கெரஹோடஹள்ளி |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்வீடு அமைப்புள்ள வேடியப்பன் கோயிலில், நடுக்கல்லில் வீரன் ஒருவனுடைய உருவம் வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் தாங்கியுள்ளது. வீரனதுமுன்புறத்திலும், பின்புறத்திலும் ஆநிரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனுக்கு மேலே இருதேவமங்கையர் வீழ்ந்துபட்ட வீரனை விண்ணுலகம் அழைத்துச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இருமருங்கிலும் உள்ள கற்களில் உள்ளது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பாகலப்பள்ளி எதிரிகளால் அழிக்கப்பட்ட பொழுது வேசாலிப் பேரையர் மருகன் அண்ணன் மகன் பப்பையன் என்பவன் எதிர்நின்று போரிட்டு பட்டான். அவனுடைய நினைவாக அவன் மகன் பாலி தேவன் கல் நாட்டினான்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |