கல்வெட்டு
சின்னய்யன்பேட்டை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சின்னய்யன்பேட்டை |
|---|---|
| ஊர் | சின்னய்யன்பேட்டை |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு இரண்டு தனிக்கல்லிலும், வீரனது உருவத்துக்கு மேலும் பொறிக்கப் பெற்றுள்ளது. வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. இடதுகாலுக்குப் பக்கத்தில் கெண்டிஉள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் மேல்கொன்றை நாட்டிலுள்ள புளியூரைச் சார்ந்த எருமை நிரைகளைக் கவர்ந்து சென்ற போது, கொங்கு நாட்டைச் சேர்ந்த எழுமாத்தூர் என்னும் ஊரில் வாழும் சாகாடச்சிற்றன் என்பான் பின்தொடர்ந்து சென்று மேல்வேணாட்டைச் சேர்ந்த மணிக்கலவடவூரில் போரிட்டு அவ்வெருமை நிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 70 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |