கல்வெட்டு
திருமலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருமலை
ஊர் திருமலை
வட்டம் சிவகங்கை
மாவட்டம் சிவகங்கை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
குறிச்சொல்
சுருக்கம்
மலை மீது வடக்கு நோக்கிய பகுதியில் கீழ்ப்புறம் அமைந்துள்ள சிறு குகைத்தள நெற்றிப் பகுதியில் இக்கல்வெட்டு மிக மெலிதாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ‘கொறிய’ என்ற சொல்லில் 'ற்’ மெய் சேர்த்து ‘பளிய்’ என்பதில் ’ள்’ சேர்த்து பள்ளிய் என்றும் கொற்றிய என்றும் கொள்ளலாம். இதன் பொருள் எருகாடு ஊரைச் சேர்ந்த காவிதி கோன் என்பவரால் இக்குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதாகும். திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமி கல்வெட்டில் ‘எருகாடுர்’, பிள்ளையார்பட்டி கல்வெட்டில் ‘எக்காட்டூர்’ என இதே ஊர்ப் பெயர்கள் உள்ளன எனலாம். எனவே இவ்வூர் பாண்டிய நாட்டில் இருந்திருக்க வேண்டும் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். எருக்காட்டுர் தாயங் கண்ணனார் அகம் 149, 319 மற்றும் புறம் 397 ஆம் பாடல்களைப் பாடியவர். உ.வே. சாமிநாத ஐயர் இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளதென்பார் ‘எரு’ - உரத்தைக் குறிக்கும். எருகட்டு ஊர் என்பது எருவிற்காக ‘கிடை’ வைத்த இடம் என்று பொருள்படும். எருக்கம் காடுகள் நிறைந்த இடம் என்பதாலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். காவிதி என்னும் பட்டம் வேளாளர், வைஷ்சியர், அமைச்சர், கணக்கர், வரிதண்டும் அரசுத் தலை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. ‘கோன்’ என்பது தலைவன், அரசன் எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் எருகாடு ஊரினைச் சேர்ந்த காவிதி பட்டம் பெற்ற தலைவன் பள்ளி அமைத்தான் என்று வருவதால் கொடையாளியின் இயற்பெயர் குறிக்கப்பட வில்லை எனலாம்.
குறிப்புதவிகள்
திருமலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 148
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு