| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருமலை |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மலை மீது வடக்கு நோக்கிய பகுதியில் கீழ்ப்புறம் அமைந்துள்ள சிறு குகைத்தள நெற்றிப் பகுதியில் இக்கல்வெட்டு மிக மெலிதாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ‘கொறிய’ என்ற சொல்லில் 'ற்’ மெய் சேர்த்து ‘பளிய்’ என்பதில் ’ள்’ சேர்த்து பள்ளிய் என்றும் கொற்றிய என்றும் கொள்ளலாம். இதன் பொருள் எருகாடு ஊரைச் சேர்ந்த காவிதி கோன் என்பவரால் இக்குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதாகும். திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமி கல்வெட்டில் ‘எருகாடுர்’, பிள்ளையார்பட்டி கல்வெட்டில் ‘எக்காட்டூர்’ என இதே ஊர்ப் பெயர்கள் உள்ளன எனலாம். எனவே இவ்வூர் பாண்டிய நாட்டில் இருந்திருக்க வேண்டும் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். எருக்காட்டுர் தாயங் கண்ணனார் அகம் 149, 319 மற்றும் புறம் 397 ஆம் பாடல்களைப் பாடியவர். உ.வே. சாமிநாத ஐயர் இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளதென்பார் ‘எரு’ - உரத்தைக் குறிக்கும். எருகட்டு ஊர் என்பது எருவிற்காக ‘கிடை’ வைத்த இடம் என்று பொருள்படும். எருக்கம் காடுகள் நிறைந்த இடம் என்பதாலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். காவிதி என்னும் பட்டம் வேளாளர், வைஷ்சியர், அமைச்சர், கணக்கர், வரிதண்டும் அரசுத் தலை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. ‘கோன்’ என்பது தலைவன், அரசன் எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் எருகாடு ஊரினைச் சேர்ந்த காவிதி பட்டம் பெற்ற தலைவன் பள்ளி அமைத்தான் என்று வருவதால் கொடையாளியின் இயற்பெயர் குறிக்கப்பட வில்லை எனலாம். |
| 653 | : | _ _ |a சிவகங்கை, திருமலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c திருமலை |d சிவகங்கை |f சிவகங்கை |
| 914 | : | _ _ |a 12.4856475 |
| 915 | : | _ _ |a 78.4581408 |
| 995 | : | _ _ |a TVA_INS_000059 |
| barcode | : | TVA_INS_000059 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |