| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கரையான்காட்டுப்பட்டி |
| 520 | : | _ _ |a நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல்லைக் கண்டனர். இந்தக் கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. 'கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு வீரன் பெயரை அறிய முடியவில்லை. இந்த நடுகல்லானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும், 35 செ.மீ. அகலமும் உள்ளது.கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் வீரன் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.ஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது. செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகவும், இடையில் வரிந்து கட்டிய சிற்றாடை, இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. சிற்றாடையின் முந்தானை வலப்புறம் இருக்க, மடியை மறைக்குமாறு முக்கோணத் தொங்கலாக ஆடையின் கீழ்பகுதி இறக்கிவிடப்பட்டுள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், வீரவழிபாடு, கொல்லிமலை நடுகல், கரையான்பட்டி, நாமக்கல், கொல்லிமலை, நடுகல் கல்வெட்டு |
| 752 | : | _ _ |a கரையான்காட்டுப்பட்டி சாலையோரம் |c கரையான்காட்டுப்பட்டி |d நாமக்கல் |f கொல்லிமலை |
| 914 | : | _ _ |a 11.30514823156 |
| 915 | : | _ _ |a 78.356580939668 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001919 |
| barcode | : | TVA_INS_001919 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |