கல்வெட்டு
நீராவிகரிசல்குளம் - கரிசல் காடு
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | நீராவிகரிசல்குளம் - கரிசல் காடு |
|---|---|
| ஊர் | நீராவிகரிசல்குளம் |
| வட்டம் | கமுதி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | நீராவிகரிசல்குளம்-கரிசல்காடு-தனிக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இராமநாதபுரம்மாவட்டம், கமுதிவட்டம், நீராவிகரிசல்குளம் என்னும் சிற்றூரின் வடக்கே ஒரு கரிசல் காட்டில் கிடக்கும் தனிக்கல். பாண்டி நாட்டில் கிடைக்கும் மிகச் சில வட்டெழுத்து நடுகற்களில் இதுவும் ஒன்று. கி. பி. 10 ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல் சுமார் 3 அடிநீளமும் 2 அடி அகலமும் கொண்டது. கல்லின் இடது ஓரத்தில் வீரன் ஒருவன் வலது கையில் ஓங்கிய வாளுடன் இடது கையில் கேடயம் கொண்டு நிற்கிறான். கால்கள் முன்பின்னாக உள்ளன. கல்லின் வலப்புறம் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. உருவம் பெரிதும் சிதைவுபட்டுள்ளது. அளற்று நாட்டு கலிசெயமங்கலத்தைச் சேர்ந்த மாமாத்திரன் என்பவனின் மகன் திருவிக்கிரமன் என்னும் வீரன் இவ்வூர் ஆநிரைகளையும், ஊரையும் காத்து இறந்துபட்டான். அவனுக்கான இவ்வூரால் வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 67 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |